Advertisement

சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை : பக்தர்கள் பரவசம்

போடி: போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு தானியங்கள் அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சிவனின் அருளாசி பெற்றனர்.

* போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கயிலாய கீழச்சொக்கநாதர் கோயில், மேலச்சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன், திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தது.

Advertisement
 
Advertisement