Advertisement

வேதகிரீஸ்வரர் கோவில் அர்த்தஜாம பூஜைபழைய நடைமுறை மீண்டும் மாற்றம்

திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் அர்த்தஜாம பூஜை, பழைய நடைமுறைக்கு மாற்றப்பட்டது.திருக்கழுக்குன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை நிர்வகிக்கும் வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது.கோவில் அமைந்துஉள்ள வேத மலைக்குன்றுகளை, பவுர்ணமியன்று பக்தர்கள் வலம்வந்து, சுவாமியை தரிசித்து வழிபடுகின்றனர்.

கோவிலில் நடக்கும் அர்த்தஜாம பூஜையைத் தொடர்ந்து, சுவாமி திரிபுரசுந்தரி அம்மன் சன்னிதி பள்ளியறை அடைவார். ஓதுவார், தேவாரம், பன்னிரு திருமுறை என பாடி முடித்த பிறகே, சன்னிதியை அடைப்பது வழக்கம்.சில ஆண்டுகளாக, ஓதுவார் பாடும்போதே, கதவை அலட்சியமாக அடைப்பதாக பக்தர்கள் குற்றம் சாட்டினர்.பூஜையில் தரிசிக்கும் பக்தர்களுக்கு, பால் உள்ளிட்ட பிரசாதம் வழங்கும் நடைமுறையை கைவிட்டதாகவும் புகார் எழுந்தது.இதுகுறித்து, புதிய செயல் அலுவலர் வேணுகோபாலிடம், பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.இதுகுறித்து பரிசீலனையை தொடர்ந்து, ஓதுவார் பாடி முடித்த பிறகே, சன்னிதி அடைப்பு, பால், புளியோதரை பிரசாதம் வழங்குவது என, செயல்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

Advertisement
 
Advertisement