Advertisement

கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே ஆண்டியபட்டி மகாலட்சுமி அம்மன், கருப்பசாமி கோவில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையால் உடம்பில் அடித்துக் கொண்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர், விழாவையொட்டி நேற்று முன்தினம் விநாயகர் மற்றும் நவ மூர்த்திகள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று அதிகாலை சேர்வை ஆட்டத்துடன், அதிர்வேட்டுகள் முழங்க தேர் பவனி நடந்தது. பின் விழாவின் முக்கிய நிகழ்வாக தண்ணீர் துறையில் பக்தர்கள் நீராடி தலையில் சக்தி தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் வரிசையாக அமைந்திருக்க கோவில் பூசாரி அருளுடன் ஆக்ரோசமாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. தொடர்ந்து கோவில் முன்பாக உள்ள கம்பத்தில் நெய் தீபம் ஏற்றி பெண்கள் வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement