Advertisement

மயிலாடுதுறையில் 12 ஜோதிர்லிங்க தரிசனம் தொடக்கம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில் ஒரே இடத்தில் 12 ஜோதிர்லிங்க தரிசனம் நிகழ்ச்சி வியாழக்கிழமை தொடங்கியது.

பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் அமைப்பு சார்பில் மயிலாடுதுறை மகாதானத்தெரு விமலாம்பிகை திருமண மண்டபத்தில் 5 நாள்கள் நடைபெறுகிறது. 12 ஜோதிலிங்க தரிசன நிகழ்ச்சியை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் துவக்கி வைத்தனர். பாரதத்தில் பிரசித்தி பெற்ற 12 ஜோதிர்லிங்க தரிசத்தை பொதுமக்கள் ஒரே இடத்தில் தரித்து இறை அருளைப் பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற கருத்தை மையமாக கொண்டு இந்த சிறப்பு தரிசன நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆன்மிகத் திருவிழா காலை 7 முதல் 12 மணி வரையும், மாலை 4 மணிமுதல் இரவு 8.30 வரையும் இலவசமாக நடைபெறுகிறது. இதில், 12 ஜோதிர்லிங்க தரிசனம், அஷ்ட லட்சுமிகளின் தத்ரூப தரிசனம், 5 தத்துவங்களுக்கான ஒளி, ஒலி காட்சிகள், ஆன்மிக உணர்வுகளை உணர்வுகளை ஊக்குவிக்கும் தியானப் படவிளக்கக் கண்காட்சி, பண்பு சார்ந்த விளையாட்டுகள், பிரச்னைக்கான தீர்வு விளக்க அரங்கு (ஓம்சாந்தி ஹெல்ப் லைன்), தினமும் மாலையில் அஷ்ட லட்சுமிகளின் தத்ரூப தரிசனம் ஆகியன நடைபெறுகிறது.

Advertisement
 
Advertisement