Advertisement

உடுமலை காமாட்சியம்மன் கோவிலில் மாதாந்திர அனுஷ பூஜை

உடுமலை: உடுமலை நேரு வீதி காமாட்சியம்மன் கோவிலில், ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா, மாதாந்திர அனுஷ பூஜை நடந்தது.உடுமலை அனுஷ பூஜா பக்த ஸபா சார்பில், மாதம்தோறும், ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் பிறந்த, அனுஷ நட்சத்திரத்தையொட்டி, சிறப்பு பூஜை நடைபெறுகிறது.நேற்று நேரு வீதி காமாட்சியம்மன் கோவிலில், மாதாந்திர அனுஷ பூஜையையொட்டி, விக்னேஷ்வர பூஜை, அனுஷ ஜெயந்தி பூஜை, வேதகோஷம், குரு மகிமை குறித்த உபன்யாசம், நாம சங்கீர்த்தனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை, உடுமலை அனுஷ பூஜா பக்த ஸபா அமைப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

ஆடி மாத சிறப்பு பூஜை: ஆடி மாதத்தையொட்டி, வாளவாடி காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பின் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.உடுமலை பாண்டியர் சந்து நல்லதங்காள் கோவிலில், இதையொட்டி, அம்மன் உருவம் தெரியும் வகையில், நெய் தீப அலங்காரம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன.

Advertisement
 
Advertisement