Advertisement

ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் உலா : கோயில் நடை சாத்தல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருளினர். இதனால் கோயில் நடை சாத்தப்பட்டது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழா ஜூலை 23ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 17ம் நாள் திருவிழாவான இன்று அதிகாலை 6:30 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க கேடயத்தில் புறப்பாடாகி கெந்தமாதன பர்வதம் மண்டகபடியில் எழுந்தருளினர். அப்போது வீதியெங்கும் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பின் மாலை 5 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதனால் கோயில் நடை சாத்தப்பட்டது.

Advertisement
 
Advertisement