Advertisement

மீனாட்சி அம்மன், சுவாமி மண்டபத்தில் குளிர்சாதன வசதி!

மதுரை: மதுரை மீனாட்சி கோயிலில், அம்மன், சுவாமி சன்னதி மண்டபங்களில் விரைவில் குளிர்சாதன வசதி செய்யப்படும், என, தக்கார் கருமுத்து கண்ணன் கூறினார். இக்கோயிலில், ஆவணிமூலத் திருவிழா நேற்று கொடியேற்றுத்துடன் துவங்கியது. இதில் பங்கேற்ற தக்கார் கருமுத்து கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: பொற்றாமரைக் குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கும் பணி 2 மாதங்களில் முடியும். குளத்தின் கற்களை அகற்றும் பணி நடக்கிறது. தற்போது அம்மன், சுவாமி அர்த்த மண்டபத்தில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. விரைவில், மண்டபம் முழுவதும் செய்யப்படும். துணை கோயில்களில் திருப்பணி வேலைகள் வேகமாக நடக்கின்றன. செல்லூர் திருவாப்புடையார் கோயிலில், ரூ.40 லட்சத்தில் நடக்கும் திருப்பணி இரு மாதங்களில் முடியும். திருவாதவூர் திருமறைநாதசுவாமி கோயிலிலும் இப்பணி நடக்கிறது. மாரியம்மன் தெப்பக்குளம் மைய மண்டபம் ரூ.45 லட்சத்தில் சீரமைக்கும் பணி விரைவில் முடியும், என்றார். கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் உடனிருந்தார்.

Advertisement
 
Advertisement