Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்ஸவம் துவக்கம்

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் கோலாகலமாக துவங்கியது.

கோவிலில் ஆண்டு முழுவதும் நடந்த அர்ச்சனைகள், திருவிழாவின் போது பக்தர்கள், கோவில் ஊழியர்கள் அறிந்தும், அறியாமலும் ஏற்படும் தோஷகளை களையவும், ஏழுமலையானுக்கு ஏற்படும் நித்திய பூஜைகளில் ஏறப்படும் குறைகளை போக்கவும் ஆண்டுதோறும் தேவஸ்தானம் வருடாந்திர பவித்ரோற்ஸவத்தை நடத்தி வருகிறது. அதன்படி நேற்று வருடாந்திர பவித்ரோற்ஸவம் துவங்கியது. விழாவில் கோவிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணி வரை 3 நாட்கள் திருமஞ்சனம் நடக்கிறது. மாலை கோவிலின் நான்கு மாட வீதிகளில் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 8ம்தேதி பவித்ர பிரதிஷ்டை, 9ம் தேதி பவித்ர சமர்ப்பணம், 10ம்தேதி பூர்ணாஹுதி நிகழ்ச்சிகள் நடக்கிறது.

Advertisement
 
Advertisement