Advertisement

துபராள்பதி அம்மன் கோயில் திருவிழா

கொட்டாம்பட்டி: சொக்கலிங்கபுரத்தில் துபராள்பதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி ஐம்பெரும் கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். ஜூலை 26 ல் காப்பு கட்டி 15 நாட்கள் விரதமிருந்தனர். நேற்று மணல்மேட்டுப்பட்டி விநாயகர் கோயிலில் இருந்து நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப் பெற்ற பக்தர்கள் பால்குடம் எடுத்து 3 கி.மீ. தூரம் ஊர்வலமாக சென்று கோயிலை வந்தடைந்தனர். அங்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கிடா வெட்டி பொங்கல் வைத்தனர். நள்ளிரவு அம்மன் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Advertisement
 
Advertisement