Advertisement

சிதம்பரம் கோவில் நந்தி முகத்தில் சூரிய ஒளி ஒவ்வொறு அமாவாசையிலும் ஆச்சரியம்

சிதம்பரம்: சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோவிலில் நந்தி முகத்தின் மீது சூரிய ஒளி படும் அதிசய நிகழ்வு நடந்தது. சிதம்பரத்தின் புகழ் மிக்க நடராஜர் கோவில் அமைந்துள்ள மேற்கு பகுதியில் அமைந்துள்ளது அனந்தீஸ்வரன் கோவில். இக்கோவில் நடராஜர் கோவிலை விட பழமை வாய்ந்ததாகும். பதஞ்சலி முனிவரால் புற்று மணலால் உருவாக்கப்பட்ட சிவலிங்கத்தை பிடித்து பூஜை செய்து வந்த சிறப்பு வாய்ந்த தளம்தான் ஆனந்தீஸ்வரர் கோவில். கோவிலின் மூலவர் ஸ்ரீ ஆனந்தீஸ்வரர் பின்னால் நாகத்துடன் காட்சி அளிப்பார். தனி சன்னதியில் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாள் அருள் பாலிக்கின்றார் இப்படி சிறப்பு வயாய்ந்த கோவிலில் ஒவ்வொறு மாத பிரதோஷ வழிபாடும் , தை அமாவாசையில் நடைபெறும் தீர்த்தவாரியும் சிறப்பான விழாவாகும்.

இக்கோவிலில் உள்ள நந்தியின் முகத்தின் மீது ஒவ்வொறு அமாவாசை தினத்தன்றும் சூரிய ஒளி விழும் ஆச்சரியமான நிகழ்வு நடைபெறும். இக்கோவிலில் மட்டும், மகாளய அமாவாசை மட்டுமின்றி தினமும் தர்ப்பணம் கொடுக்கலாம் என்பது ஐதீகம். நேற்று அமாவாசை தினத்தன்று சூரிய ஒளி நேரடியாக நந்தியின் முகத்தின் விழும் காட்சி நடந்தது. கோவிலின் மூவரை பர்த்து நந்தி அமர்ந்திருந்தாலும் சூரிய ஒளி நேரடியாக நந்தியின் முகத்தில் விழுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தம். சரியான நந்தியின் முகத்தில் 10.20 மணிக்கு சூரிய ஒளி பட்டவுடன், அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதனை பக்தர்கள் கண்டுகளித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement