Advertisement

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நவராத்திரி உற்சவம் துவக்கம்

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் இன்று தொடங்கியது. தாயார் திருவடி சேவை வரும் அக்டோபர் 2ந் தேதி நடைபெற உள்ளது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் இன்று (திங்கள் கிழமை 26-09-22) தொடங்கியது. உற்சவத்தின் முதல் நாளான இன்று பகல் 1.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மூலஸ்தானத்தில் ஸ்ரீ ரங்கநாச்சியார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. பின்னர் மாலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து ரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலு மண்டபம் வந்தடைகிறார். இரவு 7.45 மணிக்கு கொலு ஆரம்பித்து இரவு 8.45 மணி வரை நடைபெறுகிறது. இரவு 9.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ஸ்ரீரங்கநாச்சியார் மூலஸ்தானம் சென்றடைகிறார்.

தாயார் திருவடி சேவை: இரண்டாம் திருநாள் முதல் ஆறாம் திருநாளான 1-ம் தேதி மற்றும் எட்டாம் திருநாளான 3-ந் தேதி ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு கொலு மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ம் திருநாளான அக்டோபர் 2-ந் தேதியன்று ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது. விழாவின் 9-ம் நாளான 4-ந் தேதி சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி உற்சவ விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் திரு.மாரிமுத்து தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Advertisement
 
Advertisement