Advertisement

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தீர்த்தத்தை தூய்மைப்படுத்த பக்தர்கள் கோரிக்கை

மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சந்திரதீர்த்த குளத்தை தூய்மைபடுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் தேவார பாடல் பெற்ற வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சிவனின் முன்கண்ணிலிருந்து தோன்றிய முன்று பொறிகள் விழந்த இடத்தில் சூரியன், சந்திரன், அக்னி என்கிற முன்று குளங்கள் தோன்றியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இந்த குளங்களில் புனித நீராடி இறைவனை வழிபட்டால் குழந்தைபேறு நிச்சயம் என சுவேத புராணம் தெரிவிக்கிறது. இத்தகைய புனித குளங்களில் நீராட தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் வந்து செல்கின்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற முக்குளங்களில் சந்திர தீர்த்த குளத்தில் தேங்கியுள் நீர் மிகவும் மாசடைந்தும், நிறம் மாறியும் காணப்படுகிறது. அதோடு மட்டும் அல்லாமல் நீரில் ஒருவிதமான துர்நாற்ற வாடை வீசுகிறது. இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில் கோயிலுக்கு முன்று குளங்களிலும் நீராடி சுவாமியை தரிசனம் செய்யவேண்டும் என விதி உள்ளது. ஆனால் சந்திர தீர்த்த குளத்தில் நீராட அச்சமாக உள்ளது. எனவே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மாசடைந்த நீரை வெளியேற்றிவிட்டு புதிய நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறினர். குளத்திற்கு நீர் வரும் பாதையை சீரமைக்கவும், குளத்தில் நீரை ஆண்டி வாய்க்காலிருந்து நிரப்பிட பணியாளர்களை நியமனம் செய்திடவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பக்தர்கள் அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement
 
Advertisement