Advertisement

ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் நவராத்திரி விழா சிறப்பு வழிபாடு

ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் (நவராத்திரி விழா)தசரா உற்சவங்கள் நேற்று (26ம் தேதி) முதல் வெகு விமர்சையாக அனைத்து அம்மன் கோயில்களிலும் வழிபட்டு வருகின்றனர். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணைக்கோயில் ஆன கனகாசலம் மலை மீது வீற்றிருக்கும் கனகதுர்க்கை அம்மன் கோயிலில் இன்று முதல் 9 நாட்களுக்கு நவராத்திரி உற்சவங்கள் நடந்து வருகின்றன. இன்று முதல் நாள் துர்க்கை அம்மன் (உற்சவமூர்த்திக்கு) சுவர்ண கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். மேலும் கனகாச்சலம் மலை மீது வீற்றிருக்கும் துர்க்கை அம்மன் மூலவருக்கு தீப தூப நெய்வேத்தியங்கள் சமர்ப்பித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் (வாசனை திரவியங்களால் )நடைபெற்றது. இதில் ஸ்ரீ காளஹஸ்தி தேவஸ்தான அரங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தேவஸ்தான அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு கோயில் வளாகத்தில் நெய் தீபங்கள், எலுமிச்சை பழ தீபங்கள் ஏற்றியும் மாவிளக்கு ஏற்றி யும் அம்மனை வழிபட்டனர்.

Advertisement
 
Advertisement