Advertisement

வனத்திருப்பதியில் மழை வேண்டி 2ம் தேதி வரை வருண ஜெபம்!

உடன்குடி : வனத்திருப்பதி புன்னை ஸ்ரீ நிவாச பெருமாள் கோயிலில் மழை வேண்டி இன்றுமுதல் வரும் செப் 2ம்தேதி வரை வருண ஜெபம், யாகம் நடக்கிறது.தற்போது தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டதால் மழை வேண்டி வருண ஜெபம், யாகம் இன்று முதல் செப் 2ம் தேதி முதல் தொடர்ந்து பதினொன்று நாட்கள் வனத்திருப்பதி புன்னை நகர் ஸ்ரீநிவாச பெருமாள்கோயில்,ஆதிநாராயணர்-சிவனைந்த பெருமாள் கோயிலில் அருகில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள திருக்குளத்தில் 23 வேத விற்பன்னர்களுடன் வருண ஜெபம், யாகம் காலை 8மணி முதல் மதியம் 2மணி வரை மற்றும் மாலை 5மணி முதல் 7மணி வரையும் நடக்கிறது. இதில் இன்று காஞ்சி தொண்டை ஆதீனம் குருமஹா சன்னிதானம் ஞானதேசிக பராமாச்சார்ய சுவாமிகள், சாமிதோப்பு தலைமை பதி பாலவிரஜாபதி அடிகளார், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், கோயில் இணை ஆணையர் சுதர்சனும், நாளை திருக்குறுங்குடி ராமனுஜ ஜீயர் சுவாமிகள், ஆக 25ம் தேதி திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழி பேரூர் ஆதீனம் இளையபட்டம் மருதாச்சல அடிகளார், சிவச்சந்திரன், 26ம் தேதி மானமதுரை பஞ்சமுக பிரத்தியங்கார கோயில் ஞானசேகர சுவாமிகள், 27ம் தேதி கோயலூர் ஆதீனம் குரமஹா சன்னிதானம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள், 28ம் தேதி திருகயிலாய பரம்பரை வேளக்குறிச்சி ஆதீனம் 18வது குருமஹா சன்னிதானம் சத்திய ஞான மஹாதேவ தேசிக பராமாச்சாரிய சுவாமிகள், 29ம் தேதி இந்து முன்னணி நிறுவனர் இராம கோபாலன், 30ம் தேதி ஆழ்வார்திருநகரி ரெங்கராமானுஜ ஜீயர், 31ம் தேதி கோவை கௌமார மடாதிபதி குமரகுருபர சுவாமிகள், செப் 1ம் தேதி செங்கோல் ஆதீனம் 102வது குருமஹா சன்னிதானம் கல்யாணசுந்தர சத்திய ஞான தேசிய பராமாச்சாரிய சுவாமிகள், செப் 2ம் தேதி வேலூர் இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், ஆற்காடு கலவை சச்சிதானந்த சுவாமிகள், கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆகியோர் வருணஜெபம், யாகத்தில் கலந்து கொள்கின்றனர். இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு ஹோட்டல் சரவணபவன் சார்பில் காலை 10 மணி முதல் மாலை 4மணி வரையும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை ஹோட்டல் சரவணபவன் நிறுவனர் ராஜகோபால், பங்குதாரர்கள் ஷிவகுமார், சரவணன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Advertisement
 
Advertisement