Advertisement

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணிதிருவிழா!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் ஆவணிதிருவிழா செப்டம்பர் 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடு. ஆண்டுமுழுவதும் திருவிழாக்கள் நடைபெற்றுவருகிறது. இத்திருவிழாக்களில் ஆவணித்திருவிழாவும் ஒன்று. பத்துநாட்கள் நடைபெறும் இந்த திருவிழா இந்தாண்டு வரும் செப்டம்பர் 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்றுகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. முக்கிய திருவிழாவான 5ம் திருவிழா செப்டம்பர் 9ம் தேதி அன்றும், 7ம் திருநாள் அன்றும் சுவாமி சிவப்பு சாத்தி வீதிஉலா வரும் நிகழ்ச்சிநடக்கிறது. செப்.11ம் தேதி சுவாமிபச்சை சாத்திவீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. சிகர நிகழ்ச்சியான 10ம்திருநாளான செப்டம்பர் 14ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. முதல் மற்றும் ஏழாம் திருநாள் அன்று கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் வழக்கம் போல் காலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

Advertisement
 
Advertisement