Advertisement

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்: பக்தர்கள் பரவசம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நடப்பாண்டு கார்த்திகை தீப திருவிழா கடந்த, 27ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக பஞ்ச பூதங்கள், ‘ஏகன், அனேகன்’ என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்கு கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதிகாலை 03.30 மணி அளவில் ஸ்வாமி சன்னதி மூல கருவறை முன் “ ஏகன் அனேகன்” என்பதை குறிக்கும் வகையில் 5 மடக்குகளில் பஞ்சமுகதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின்பு அதிகாலை நான்கு மணிக்கு நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகிய பஞ்ச பூதங்கள், சிவபெருமான் ஒருவனே அதாவதுஏகன், அனேகன் என்பதை கூறும் வகையில், சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் குருக்கள் கையில் ஏந்தி, பரணி தீபம் மடக்கில் ஜோதி ரூபமாய் வெளிபிரஹாரம் வலம் வந்த போது ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி கோஷத்துடன் தரினசம் செய்தனர்.

‘அனேகன், ஏகன்’ என்பதை விளக்கும் வகையில் மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயர மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழாவையொட்டி சுவாமி சன்னதி முழுவதும், பல்வேறு வண்ண ரோஜா, சாமந்தி பூக்களால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. கோவில் வளாகம் முழுவதும், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. கோவில் வளாக கலையரங்கில் சமய சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகள், ஆன்மிக பாடல்கள் ஒலித்தபடி, தீபத்திருவிழாவால் கோவில் மட்டுமின்றி திருவண்ணாமலை நகரமே, களை கட்டியுள்ளது.

Advertisement
 
Advertisement