Advertisement

உத்தரகோசமங்கையில் பிப்., 3 அன்று மகா தீப ஆரத்தி விழா

உத்தரகோசமங்கை: ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் 3ம் ஆண்டு மகா தீப ஆரத்தி விழா நடக்க உள்ளது.

ஆரத்தி குழு ஒருங்கிணைப்பாளர் ராமேஸ்வரம் நாகராஜன் கூறியதாவது; உத்தரகோசமங்கை கோயிலுக்கு முன்புறமுள்ள பிரம்ம தீர்த்த தெப்பக்குளத்தில் பிப்.,3 அன்று மாலை 6:00 மணிக்கு கோயில் சிவாச்சாரியார்களால் தீப ஆரத்தி விழா நடக்க உள்ளது. கோயில் தெப்பக்குளங்கள், ஊருணிகள், கண்மாய்கள், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளை அசுத்தம் செய்யாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற குறிக்கோளை வலியுறுத்தியும், உலக நன்மைக்காகவும் தீப ஆரத்தி நடக்கிறது. இவ்விழாவில் ஏராளமான சிவனடியார்கள் பங்கேற்க உள்ளனர் என்றார். ஏற்பாடுகளை உத்தரகோசமங்கை மாத பவுர்ணமி கிரிவலக்குழு, சேது சமுத்திர ஆர்த்தி குழு மற்றும் சமூக தொண்டு நிறுவனங்கள், தர்ம ரக்க்ஷசண சமிதி ஆகியோர் செய்து வருகின்றனர்.

Advertisement
 
Advertisement