Advertisement

பி.எஸ்.பாளையத்தில் சிறப்பு வேள்வி பூஜை

திருக்கனுார்: பி.எஸ்.பாளையம் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் அவதார தினத்தை முன்னிட்டு சிறப்பு வேள்வி பூஜை நேற்று நடந்தது. திருக்கனுார் அடுத்த பி.எஸ்.பாளையம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் 83வது அவதார தினத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு வேள்வி பூஜை மற்றும் சக்தி மாலை அணிதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 5:00மணிக்கு திருப்பள்ளி எழுப்புதல் நிகழ்ச்சியும், உலக நன்மை வேண்டி மகளிர்களின் கூட்டு வழிபாடு நடந்தது. பின்னர்,காலை 8:00 மணிக்கு சிறப்பு வேள்வி பூஜை நடத்தப்பட்டு, புனிதநீர் ஊற்றப்பட்டது. காலை 11:00 மணியளவில், சக்தி மாலை அணிதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவினை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க விழுப்புரம் மாவட்ட தலைவர் ஜெ யபாலன், வட்டத் தலைவர் பழனி ஆகியோர் துவக்கி வைத்தனர். ஏற்பாடுகளை ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற தலைவர் ஆறுமுகம், நிர்வாகிகள் பார்த்தசாரதி, ராஜாராம், திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் செய்திருந்தனர். மாலை அணிந்த பக்தர்கள், வரும் 28ம் தேதி மேல்மருவத்தூர் சென்று இருமுடி செலுத்துகின்றனர்.

Advertisement
 
Advertisement