Advertisement

மடப்புரம் காளி கோயிலில் 58 லட்ச ரூபாய் உண்டியல் வருவாய்

திருப்புவனம்: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை 58லட்ச ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. திருப்புவனம் மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு வாரம்தோறும் வெள்ளி செவ்வாய், ஞாயிறு கிழமைகளில் பெண்கள் கூட்டம் அலைமோதும், எதிரிகளை பழிவாங்க காசு வெட்டி போடும் பழக்கம் இக்கோயிலில் உண்டு. கடந்த சில மாதங்களாக உண்டியல்கள் திறக்கப்படவில்லை. கடந்த இரு நாட்களாக சிவகங்கை ஹிந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சிவராம்குமார், உதவி ஆணையர்கள் வில்வகுமார், செல்வராஜ் முன்னிலையில் மொத்தமுள்ள 15 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பணம், நகை கணக்கிடப்பட்டன. இதில் 58 லட்சத்து 49 ஆயிரத்து 256 ரூபாய் ரொக்கமும், 616 கிராம் தங்கமும், 1618 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தன.

Advertisement
 
Advertisement