Advertisement

காட்டு மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

சின்னாளபட்டி: அம்பாத்துறை காட்டு மாரியம்மன் கோயில் திருவிழாவில், பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சின்னாளபட்டி: அம்பாத்துறை காட்டு மாரியம்மன் கோயில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து, பூக்குழி நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்பாத்துறை மாரியம்மன் கோயில் திருவிழாவில், அரண்மனையில் இருந்து புறப்படும் அம்மன் கிராமத்தின் தென்புற தோட்டத்து சாலையில் காட்டு மாரியம்மனாக எழுந்தருளல் வழக்கம். இந்தாண்டிற்கான விழா, மே 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஜூன் 3ல் அம்பாத்துறை அரண்மனையில் இருந்து அம்மன் காட்டு மாரியம்மன் கோவிலுக்கு புறப்பாடு நடந்தது. அரண்மனையில் இருந்து ஜமீன்தார் துரைப்பாண்டியன் மாக்காள நாயக்கர் தலைமையில், கிராம மக்களின் பால்குட ஊர்வலம் நடந்தது. அம்மனுக்கு பாலாபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. பூக்குழி இறங்குதல் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Advertisement
 
Advertisement