Advertisement

நவராத்திரி ஏழாம் நாள்: வழிபடும் முறை!

நவராத்திரி ஏழாம் நாளில்(அக்.22ல்) அம்பாளை வித்யா லட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். தாமரை மலர் ஆசனம் அமைத்து, இருபுறமும் யானை பொம்மை வைக்க வேண்டும். வெள்ளைத் தாமரை மாலை சூட்ட வேண்டும்.மதுரை மீனாட்சியம்மன் நாளை மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறாள்.இறைவன் நமக்கு தந்த வாழ்க்கை வளம் மிக்கதோ, ஏழ்மையானதோ.. எப்படி இருந்தாலும் ரசித்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். அடுத்தவர் வாழ்வைப் பார்த்து, அப்படி நமக்கு அமையவில்லையே என பொறாமைப்படக் கூடாது. மகிஷன் என்ற அசுரனுக்கு பெரிய ராஜ்யம் இருந்தது. ஆனாலும், அவன் தேவலோகத்தின் மீது ஆசை கொண்டு, அதைப் பறித்துக் கொண்டான். முனிவர்களையும் யாகம் செய்யும் இடத்தில் இருந்து விரட்டி விட்டான். இவர்களது வயிற்றெரிச்சல் இணைந்து அக்னியானது. அதிலிருந்து ஒரு பெண் வெளிப்பட்டாள். அவளுக்கு எல்லா தெய்வங்களும் தங்களது ஆயுதங்களைக் கொடுத்தனர். அவள் மகிஷனை ஒழித்து மகிஷாசுரமர்த்தினி என பெயர் பெற்றாள். நாளை, மீனாட்சி அம்மனின் மகிஷாசுரமர்த்தினி கோலத்தை தரிசித்தால், தீய சக்திகளிடம் இருந்து நமக்கு பாதுகாப்பு கிடைக்கும். நைவேத்யம்: தேங்காய் சாதம்
தூவவேண்டிய மலர்: மல்லிகை, செவ்வரளி பாட வேண்டிய பாடல்:
பயிரவி பஞ்சமி பாசாங் குசைபஞ்ச பாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிருங்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலிவராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே!

Advertisement
 
Advertisement