Advertisement

திருப்பதி கோவில் தரிசனத்தில் மாற்றம்!

சென்னை: திருப்பதி கோவிலில், வி.ஐ.பி., தரிசனத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, என, திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் கண்ணையா கூறினார்.சென்னையில் நேற்று கண்ணையா கூறியதாவது: திருப்பதி கோவிலில், திங்கள் முதல் ஞாயிறு வரை, காலையில், 500 ரூபாய் செலுத்தி, வி.ஐ.பி., வரிசையில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். இந்த தரிசனத்தில், எல்.1, எல்.2 மற்றும் எல்.3 என, மூன்று பிரிவாக, பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். முதல் வழியில் செல்லும் பக்தர்கள், சாமி அருகே அழைத்துச் செல்லப்பட்டு, ஆரத்தியும், தீர்த்தமும், சடாரியும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. எல்- 2 வழியில் வரும் பக்தர்களுக்கு ஆரத்தி, தீர்த்தம் மற்றும் சடாரி இல்லாமல், தரிசனம் செய்யும் முறை இருந்து வந்தது. தற்போது, இவ்வழியாக வருகின்ற, வி.ஐ.பி., பக்தர்களுக்கு தீர்த்தம், சடாரி மற்றும் ஆரத்தியுடன், சாமி அருகில் தரிசனம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எல்.3 வழியில், 15 அடி தூரத்திலிருந்து, சாமி தரிசனம் செய்தவர்கள், இனி, சயன மண்டபத்திலிருந்து சாமி தரிசனம் செய்யலாம்.பால், கிச்சடிகாத்திருக்கும் பக்தர்களுக்கு காலை வேளையில், பால் மற்றும் கிச்சடி வழங்கப்படுவதை போல, சாமி தரிசனம் செய்ய, டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கும், பால் மற்றும் கிச்சடி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கண்ணையா கூறினார்.

Advertisement
 
Advertisement