Advertisement

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் 1 கோடி செலவில் திருபணிகள்!

கன்னியாகுமரி: வரும் 27 -ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் இது வரை நடந்துள்ள கும்பாபிஷேகதிருப்பணிகள் பட்டியலை திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 3000 -ம் ஆண்டு பழமைவாய்ந்த கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயிலில் கடந்த 1998-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு (2013-ம் ஆண்டு)வரும் 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அதிகார்வபுர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து கும்பாபிஷேக பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடந்த ஓராண்டிற்கு மேலாக நடந்து வரும் திருப்பணிகளில் 90 சதவிவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் இது வரை நடந்துள்ள பணிகள் குறித்து திருக்கோயில் பட்டியல் வெளியிட்டுள்ளது. திருக்கோயில் கல் சுவர்கள்,பாவுக்கல் துண்கள் இரசாயனக் கலவை முலம் சுத்தம் செய்தல் 6 லட்சம் ருபாய் உபய நிதிமுலமும்,கொடிமரம் பழுதுபார்த்து புதுபித்தல் 2லட்சத்த்து 20 ஆயிரம் ருபாய் உபயநிதி முலமும்,சாஸ்தா சன்னதி திருப்பணி 3 லட்சம் ருபாய் உபயநிதி முலமும்,பரசுராம விநாயகர் கோயில் கருவறை விமானம் சிற்பங்கள் அமைத்தல் மற்றும் சுற்றுப் பிரகாரம் கிரானைட் தளம் அமைக்க 4லட்சத்து 15 ஆயிரம் உபயநிதி முலமும், பழுதடைந்த மின் இணைப்புகளை மாற்றி புதிதாக மின் இணைப்பு வேலைகள் செய்தல் 4 லட்சம் ருபாய் உபயநிதி முலமும்,நாகர் சன்னதி திருப்பணி 1லட்சத்து 50 ஆயிரம் ருபாய் உபயநிதி முலமும்,ஆறாட்டு மண்டபம் திருப்பணி 7 லட்சம் ருபாய் உபயநிதி முலமும்,விநாயகர் சன்னதி திருப்பணி 1 லட்சம் ருபாய் உபயநிதிமுலமும்,அம்பாள் விமானம் புதிதாக கட்டும் திருப்பணி 6 லட்சம் ருபாய் உபயநிதிமுலமும்,பாலசௌந்தரி அம்மன் விமானம் 1,50 லட்சம் ருபாய் உபயநிதி முலமும்,தியாக செந்தரி அம்மன் விமானம் பழுதுபார்த்தல் 1,50 லட்சம் ருபாய் உபயநிதி முலமும்,காலபைரவர் விமானம் பழுதுபார்த்தல் 1,50 லட்சம் ருபாய் உபயநிதிமுலமும்,வடக்கு நுழைவு வாசல் பிரபை பழுது பார்த்தல் 5 லட்சம் ருபாய் உபயநிதி முலமும், கிழக்கு நுழைவு வாசல் பிரபை பழுது பார்த்தல் 4,லட்சத்து 75 ஆயிரம் ருபாய் உபயநிதி முலமும்,கோயில் கதவு,ஜன்னல்கள் பழுதுபார்த்தல் மற்றும் புதிய கதவுகள் அமைத்தல் 4 லட்சம் ருபாய் உபயநிதி முலமும்,கோயில் மடப்பள்ளி பழுதுபார்த்தல் 4லட்சத்து 10 ஆயிரம் ருபாய் உபயநிதிமுலமும்,கோயில் 16 கால் மண்டபம் திருப்பணி 4 லட்சம் ருபாய் (பணி துவக்கப்படவேண்டும்) உபயநிதி முலமும்,முலஸ்தானம் உள் சுற்று பிரகாரம் மற்றும் வாடா விளக்கு மண்டபம் கிரினைட் தளம் அமைத்தல் 7 லட்சத்து 50 ஆயிரம் ருபாய் உபயநிதி முலமும்,கோயில் தென் மேற்கு மண்டபம்(தியானமண்டபம்) 5 லட்சம் ருபாய் உபயநிதி முலமும்,மணிமண்டப துண்கள் பித்தளை தகடுகள் பொதிதல் 1 லட்சத்து 50 ஆயிரம் ருபாய் உபயநிதி முலமும்,மண்டபம் ஓழுக்கு மாற்றுதல் 9 லட்சத்து 55 ஆயிரம் ருபாய் திருக்கோயில் நிதி முலமும், திருக்கோயில் வெளிசுற்று பிரகாரம் செமி பாலிஸ்ட் கிரானைட் கல் பதித்தல் 4 லட்சத்து 75 ஆயிரம் ருபாய் திருக் கோயில் நிதி முலமும்(பணி துவக்கப்படவேண்டும்),நவசக்தி மண்டபம் 9 லட்சம் ருபாய் உபயநிதிமுலமும்,திருக்கோயில் வளாகம் பெயின்டிங் 6 லட்சம் ருபாய உபயநிதி முலமும்,முலஸ்தானம் கதவுகள் பித்தளை தகடுகள் பொதிதல் 2 லட்சத்து 50 ஆயிரம் ருபாய உபயநிதி முலமும் என மொத்தம் 108.35 லட்சம் ருபாய்க்கு திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

Advertisement
 
Advertisement