Advertisement

மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை!

புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலில், பாலஸ்தாபனத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது.புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோவிலில், கும்பாபிஷேகம் செய்து 12 ஆண்டுகள் முடிந்த நிலையில், கடந்த ஜூலை 5ம் தேதி திருப்பணி துவக்க விழா பூஜை நடந்தது.இதைத் தொடர்ந்து, கோவில் சுற்றுப்பிரகாரம் விரிவாக்கம் செய்யும் திருப்பணி துவங்கி உள்ளது. இதை முன்னிட்டு, பாலஸ்தாபன நிகழ்ச்சி நேற்று (4ம் தேதி) நடந்தது.அதிகாலை 4 மணிக்கு மேல் 5.15 மணிக்குள், கோவிலின் முன்மண்டப ராஜகோபுரம், மூலவர் விநாயகர் விமானம், பால விநாயகர் விமானம், பால முருகர் விமானம், சண்டிகேஸ்வரர் விமானங்கள் பாலஸ்தாபனம் செய்யப்பட்டன.கோவில் நிர்வாக அதிகாரி கருணாகரன் கூறும்போது, பாலஸ்தாபனம் செய்துள் ளதால், மணக்குள விநாயகர் மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள் தினமும் நடக்கும். தங்க கவசம், நவரத்தின கவசம் சார்த்தப்படும். தங்க ரதம், வெள்ளி ரதம் உள்ளிட்ட உற்சவங்கள், கும்பாபிஷேகத்திற்கு பிறகு நடத்தப்படும் என்றார். விழாவில் கோவில் அறங்காவலர் குழுவினர் கலந்து கொண்டனர்.

Advertisement
 
Advertisement