Advertisement

துர்காதேவியை வழிபட ராகு கால நேரம் சிறப்பானதாக கருதுவது ஏன்?

கடவுள் திருவுருவங்களுக்கு நேரம் காலம் என்ற சம்பந்தத்தால் சிறப்பு இருக்காது. முழுமை பெற்ற கடவுளுக்கு எந்த நேரமும் பணிவிடை செய்யாமல் நேரம் காலம் எல்லாம் நம்மோடு சம்பந்தப்பட்டது. மற்ற அலுவல்களில் இருந்து விடுபட்டு பூஜையில் இறங்க வேண்டும் ராகு காலத்தில் வேறு அலுவல்களுக்கு இடம் இல்லாததால், அது பணிவிடைக்கு உகந்ததாக மாறிவிடும். நம் மனம் மற்ற அலுவல்களின் தொடர்பு இல்லாமல் இருக்கும் வேளையில் கடவுள் வழிபாட்டில் ஈடுபாட்டுடன் செயல்பட முடியும். இறை உருவத்தை மட்டுமே மனத்தில் நிறுத்தி, அதில் லயித்து வழிபடும்போது அந்த வழிபாடு சிறப்பு பெறும். இந்த அடிப்படையில் ராகு கால வழிபாடும் சிறப்பு பெற்றிவிடுகிறது. நமது விருப்பப்படி மற்ற அலுவல்களைத் துறந்து, இறையுருவத்தை தியானிக்க வேண்டும். இந்த வழக்கம் வளர்வதற்கு ராகுகால பூஜை அடித்தளமாக அமையும். அதற்காக, மற்ற அலுவல்கள் இல்லாத வேளையை மட்டுமே வழிபட்டு வேளையாக நினைக்கக் கூடாது. அலுவல்கள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு வழிபாட்டில் பிடிப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மனத்தை ஒருநிலையில் நிறுத்த இயலாதவர்கள், அதைப் பழக்கப்படுத்த ராகுகால பூஜையை ஏற்கலாம். மற்றபடி, ராகு கால பூஜை மட்டும்தான் செய்வேன், அது மட்டுமே சிறப்பு என்று இருக்கக்கூடாது. சமீபத்தில்தான் ராகுகால பூஜை பிரபலமாகியிருக்கிறது. மக்களின் ஆதரவு பெருகியுள்ளதால், அவர்களை நம்பி அந்த பூஜை ஆறு கால பூஜை பிரம்மோத்ஸவம். தீர்த்தவாரி போன்ற நடைமுறைகளில் எல்லாம் ராகு கால பூஜை இருக்காது. வருங்காலத்தில் ஏதாவதொரு இறையுருவத்துக்கு குளிக கால பூஜையும் வரலாம். ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆங்கில வருடப் பிறப்பன்று, நடுநசியில் கோயில்களில் பூஜை பணிவிடைகள் நடைபெறுகின்றன. ஆகமத்தை உதறித் தள்ளிவிட்டு, ஆண்டின் ஆரம்ப நாளில், அதாவது ஆங்கிலேயர்களின் வருடத் துவக்க நாளில் நம்மவர்கள் இரவு 12 மணிக்கு பூஜை பணிவிடைகளை நடத்துகிறார்கள். பூஜைகளும் வர்த்தரீதியில் செயல்படும் போது, அதற்குச் சிறப்பு கிட்டிவிடுகிறது. துர்கையை ராகு காலத்தில் வழிபடுவீர்கள். சாஸ்திர சம்மதம் இல்லை என்று சொன்னால் பூஜையை விட்டு விடுவீர்கள். சாஸ்திர சம்மதமான வேளைகளில் பூஜை செய்ய மனம் இருக்காது. அல்லாத வேளைகளில் மனம் இருக்கும் ஆகையால், பூஜையில் ஈடுபட வைப்பதற்காக ராகு காலத்தை ஏற்கலாம். காலப்போக்கில் தெளிவு வந்த பிறகு, ஆஸ்திகத்தில் பற்று ஏற்பட்டு பணிவிடையில் விருப்பத்தை அடைய வழி பிறக்கும். ஆகையால், தவறானாலும் நன்மையை எண்ணி ஏற்றுக்கொள்ளலாம் அக்டோபர் 2 என்றதும் மகாத்மா காந்தி ஞாபகத்துக்கு வருவார், ராகுகால துர்கை என்றதும் அம்பாள் ஞாபகம் வரும். அப்போது வழி படுவது சிறப்பு. தினமும் துர்கையை நினை என்றால் மனம் அதைச் செய்யாது, ராகு காலம் துர்கைக்கு விசேஷம் என்றால், உடனே ஏற்கும். தேவ தார்ச்சனம் என்ற பெயரில் நித்தமும் வழிபடச் சொல்லும் சாஸ்திரம். அதில் ஐந்து இறையுருவங்கள் இருக்கும். அதற்கு பஞ்சாயதனம் என்று பெயர். ஆதித்யன், அம்பிகை, விஷ்ணு, கணபதி, ஈசன் ஆகியோரை வழிபடச் சொல்லும், இதுவே முழுவழிபாடாக மாறுவதால், ராகு கால துர்கை, குளிகை கால பைரவர் என்று தேவையில்லாமல் மனம் குழம்பியிருப்பது தவறு. எந்த வேளையிலாவது ஏதாவதொரு இறையுருவை வழிபடுங்கள் விருப்பம் ஈடேறும்.

Advertisement
 
Advertisement