Advertisement

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண விழா துவக்கம்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பங்குனி திருக்கல்யாண விழா,நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, நேற்று காலை கருடாழ்வார் முத்திரை பதித்த கொடி, நான்கு வீதிகளும் சுற்றி வரப்பட்டு, சுதர்சனன் பட்டரால் தங்க கொடி மரத்தில் ஏற்ற, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தக்கார் ரவிச்சந்திரன், இணை ஆணையாளர் தனபால், செயல் அலுவலர் சுப்பிரமணியன், ஸ்தானிகம் ரமேஷ், வேதபிரான் பட்டர் சுதர்சனன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா நாட்களில், ஆண்டாள், ரெங்கமன்னார், சந்திரபிரபை, சிம்மம், தங்க பரங்கி நாற்காலி, சிறிய திருவடி அனுமார், சேஷ, கோவர்த்தன, பர்வத, ஹம்ச, பெரிய திருவடி, குதிரை வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 27 காலை, ஆண்டாள், ரெங்கமன்னார் திருத்தேரில் எழுந்தருளலும், கோட்டை தலைவாசல் ரேணுகா தேவி கோயிலில், திருக்கல்யாண பட்டு புடவை, வேட்டி, திருமாங்கல்யம் பெறுதலும், இரவு 7 மணிக்கு ஆடிப்பூர மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணமும் நடக்கிறது.

Advertisement
 
Advertisement