Advertisement

ஐங்குறுநூறு (பகுதி-1)

ஐங்குறுநூறு - 1. வேட்கைப் பத்து

வாழி ஆதன் வாழி அவினி
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
எனவேட் டோளே யாயே யாமே
நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
யாணர் ஊரன் வாழ்க
பாணனும் வாழ்க எனவேட் டேமே. 1 வாழி ஆதன் வாழி அவினி
விளைக வயலே வருக இரவலர்
எனவேட் டோளே யாயே யாமே
பல்லிதல் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்
தண்துறை யூரன் கேண்மை
வழிவ்ழிச் சிறக்க எனவேட் டேமே.2 வாழி ஆதன் வாழி அவினி
பால்பல ஊறுக பகடுபல சிறக்க
எனவேட் டோளே யாயே யாமே
வித்திய உழவர் நெல்லோடு பெயரும்
பூக்கஞு லூரன் தன்மனை
வாழ்க்கை பொலிக என்வேட் டேமே.3 வாழி ஆதன் வாழி அவினி
பகைவர்புல் ஆர்க பார்ப்பார் ஓதுக
எனவேட் டோளே யாயே யாமே
பூத்த கரும்பிற்காய்த்த நெல்லிற்
கழனி யூரன் மார்பு
பழன் மாகற்க எனவேட் டேமே.4 வாழி ஆதன் வாழி அவினி
பசியில் ஆகுக பிணீகேன் நீங்குக
எனவேட் டோளே யாயே யாமே
முதலை போத்து முழுமீன் ஆரும்
தண்துறை யூரன் தேரேம்
முன்கடை நிற்க எனவேட் டேமே.5 வாழி ஆதன் வாழி அவினி
வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக
எனவேட் டோளே யாயே யாமே
மல்ர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்
தண்துறை யூரண் வரைக
எந்தையும் கொடுக்க எனவேட் டேமே. 6 வாழி ஆதன் வாழி அவினி
அறநனி சிறக்க அல்லது கெடுக
என வேட்டோளே யாயே யாமே
உளை மருதத்துக்கி கிளைக்குரு
தண்துறை யூரன் தன்னூர்க்
கொண்டனன் செல்க எனவேட் டேமே.7 வாழி ஆதன் வாழி அவினி
அரசுமுறை செய்க களவில் லாகுக
எனவேட் டோளே யாயே யாமே
அலங்குசினை மாஅத்து அணிமயில் இருக்கும்
புக்கஞல் ஊரன் சுளீவண்
வாய்ப்ப தாக எனவேட்டோமே.8 வாழி ஆதன்வாழி அவினி
நன்றுபெரிது சிறக்க தீதில் ஆகுக
என வேட் டோளே யாயே யாமே
கயலார் நாரை போர்வின் சேக்கும்
தண்துறை யூரன் கேண்மை
அம்பல் ஆகற்க எனவேட் டேமே. 9 வாழி ஆதன் வாழி அவினி
மாரி வாய்க்க வளநனி சிறக்க
எனவேட் டோளே யாயே யாமே
பூத்த மாஅத்துப் புலாலஞ் சிறுமீன்
தண்துறை யூரன் தன்னோடு
கொண்டனன் செல்க எனவேட் டேமே.10 ஐங்குறுநூறு - 2. வேழப்பத்து மனைநடு வயலை வேழஞ் சுற்றும்
துறைகேழ் ஊரன் கொடுமை நாணி
நல்லன் என்றும் யாமே
அல்லன் என்னுமென் தடமென் தோளே.11 கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும்
துறைகேழ் ஊரன் கொடுமை நன்றும்
ஆற்றுக தில்ல யாமே
தோற்கதில்லஎன் தடமென் தோளே.12 பரியுடை நன்மான் பொங்குளை யன்ன
வடகரை வேழம் வெண்பூப் பகரும்
தண்துறை யூரண் பெண்டிர்
துஞ்சூர் யாமத்துந் துயலறி யலரே13 கொடிப்பூ வேழம் தீண்டி அயல
வடுக்கொண் மாஅத்து வண்தளிர் நுடங்கும்
மணித்துறை வீரன் மார்பே
பனித்துயில் செய்யும் இன்சா யற்றே.14 மண்லாடு மலிர்நிறை விரும்பிய ஒண்தழைப்
புனலாடு மகளிர்க்குப் புணர்துணை உதவும்
வேழ மூதூர் ஊரன்
ஊரன் ஆயினும் ஊரனல் லன்னே.15 ஓங்குபூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால்
சிறுதொழு மகளிர் அஞ்சனம் பெய்யும்
பூக்கஞல் ஊரனை யுள்ளிப்
பூப்போல் உண்கண் பொன்போர்த் தனவே.16 புதன்மிசை நுடங்கும் வேழ வெண்பூ
விசும்பாடு குருகின் தன்றும் ஊரன்
புதுவோர் மேவலன் ஆகலின்
வறிதா கின்றுஎன் மடங்கெழு நெஞ்சே.17 இருஞ்சா யன்ன செருந்தியொடு வேழம்
கரும்பின் அலம்ரும் கழனி ஊரன்
பொருந்து மல ரன்னஎன் கண்ணழப்
பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே.18 எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினை
புணர்ந்தோர் மெய்ம்மணங்க் கமழும் தண்பொழில்
வேழவெண்பூ வெள்ளுகை சீக்கும்
ஊரன் ஆகலின் கலங்கி
மாரி மலரின் கண்பனி யுகுமே.19 அறுசில் கால அஞ்சிறைத் தும்பி
நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும்
காம்புகண் டன்ன தூம்புடை வேழத்துத்
துறைநணி யூரனை உள்ளியென்
இறையேர் எல்வளை நெகிழ்புஓ டும்மே.20 ஐங்குறுநூறு - 3. கள்வன் பத்து முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்
புள்ளிக் கள்வன் ஆம்பல் அறுக்கும்
தண்டுறை ய்ய்ரன் தளிப்பவும்
உண்கண் பசப்பது எவன்கொல் அன்னாய்21 அள்ளல் ஆடிய புள்ளிக் கள்வன்
முள்ளி வேரளைச் செல்லும் ஊரன்
நல்லசொல்லி மணந்துஇனி
நீயேன் என்றது எவன்கொல் அன்னாய்22 முள்ளி வேரளைக் கள்வன் ஆட்டிப்
பூக்குற்று எய்திய புனல் அணி யூரன்
தேற்றஞ் செய்துநப் புணர்ந்தினித்
தாக்கணங்கு ஆவ தெவன்கொல் அன்னாய்.23 தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு
பிள்லை தன்னும் முதலைத்து அவனூர்
எய்தினன் அகின்று கொல்லோ மகிழ்நன்
பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர்
நலங்கொண்டு துறப்பது எவன்கொல் அன்னாய்.24 அயல்புறந் தந்த புனிற்றுவளர் பைங்காய்
வயலைச் செங்கொடி கள்வன் அறுக்கும்
கழனி யூரன் மார்புபலர்க்கு
இழைநெகிழ் செல்லல் ஆகும் அன்னாய்.25 கரந்தைஅம் செறுவில் துணைதுறந்து கள்வன்
வள்ளை மென்கால் அறுக்கும் ஊரன்
எம்மும் பிறரும் அறியான்
இன்னன் ஆவது எவன்கொல் அன்னாய்.26 செந்நெலம் செறுவில் கதிகொண்டு கள்வன்
தண்அக மண் அளைச் செல்லும் ஊரற்கு
எவ்வளை நெகிழ சாஅய்
அல்லல் உழப்பது எவன்கொல் அன்னாய்.27 உண்துறை அணங்கிவள் உறைநோய் ஆயின்
தண்சேறு கள்வன் வரிக்கும் ஊரற்கு
ஒண்டொடி நெகிழச் சாஅய்
மெந்தோள் பசப்பது எவன்கொல் அன்னாய்.28 மாரி கடிகொளக் காவலர் கடுக
வித்திய வென்முளை கள்வன் அறுக்கும்
கழனி ஊரன் மார்புற மரீஇத்
திதலை அல்குல் நின்மகள்
பசலை கொள்வது எவன்கொல் அன்னாய்.29 வேப்புநனை யன்ன நெடுங்கள் கள்வன்
தண்அக மண்அளை நிறைய நெல்லின்
இரும்பூ உறைக்கும் ஊரற்குஇவள்
பெருங்கவின் இழப்பது எவன்கொல் அன்னாய்.30 ஐங்குறுநூறு - 4. தோழிக்கு உரைத்த பத்து அம்ம வாழி தோழி மகிழ்நன்
கடனன்று என்னும் கொல்லோ
நம்மூர் முடமுதிர் மருதத்துப் பெருந்துறை
உடனாடு ஆயமோடு உற்ற சூளே.31 அம்ம வாழி தோழி மகிழ்நன்
ஒருநாள் நம்மில் வந்ததற்கு எழுநாள்
அழுப என்பஅவன் பெண்டிர்
தீயுறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே.32 அம்ம வாழி தோழி மகிழ்நன்
மருதுயர்ந்து ஓங்கிய விரிபூம் பெருந்துறைப்
பெண்டிரோடு ஆடும் என்பதன்
தண்தார் அகலம் தலைத்தலைக் கொளவே.33 அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பொய்கைப் பூத்த புழற்கால் ஆம்பல்
தாதுஏர் வண்ணம் கொண்டன
ஏதி லாளற்குப் பசந்தஎன் கண்ணே.34 அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பொய்கை ஆம்பல் நார்உரி மென்கால்
நிறத்தினும் நிழற்றுதல் மன்னே
இனிப்பசந் தன்றுஎன் மாமைக் கவினே.35 அம்ம வாழி தோழி யூரன்
நம்மறந்து அமைகுவன் ஆயின் நாம்மறந்து
உள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னே
கயலெனக் கருதிய் உண்கண்
பசலைக்கு ஒல்கா ஆகுதல் பெறினே.36 அம்ம வாழி தோழி மகிழ்நன்
நயந்தோர் உண்கண் பசந்துபனி மல்க
வல்லன் வல்லன் பொய்த்தல்
தேற்றான் உற்ற சூள்வாய்த் தல்லெ37 அம்ம வாழி தோழி மகிநன்
தன்சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும்
தந்தளிர் வெளவும் மேனி
ஒள்தோடி முன்கை யாம்அழப் பிரிந்தே.38 அம்ம வாழி தோழி யூரன்
வெம்முலை யடைய முயங்கி நம்வயின்
திருந்திழைப் பணைத்தோள் ஞெகிழப்
பிரிந்தனன் ஆயினும் பிரியலன் மன்னே.39 அம்ம வாழி தோழி மகிநன்
ஒள்தொடி முன்கை யாம் அழப் பிரிந்துதன்
பெண்டிர் ஊர் இறை கொண்டனன் என்ப
கெண்டை பாய்தர அவிழ்ந்த
வண்டுபிணி ஆம்பல் நாடுகிழ வோனே.40

ஐங்குறுநூறு - 5. புலவிப் பத்து தன்பார்ப்புத் தின்னும் அன்புஇல் முதலையொடு
வெண்பூம் பொய்கைத்து அவனூர்என்ப அதனால்
தன்சொல் உணர்ந்தோர் மேனி
பொன்போல் செய்யும் ஊர்கிழ வோனே.41 மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள் கொலோ
யாணர் ஊரநின் மானிழை யரிவை
காவிரி மலிர்நிறை யன்னநின்
மார்புநனி விலக்கல் தொடங்கி யோளே.42 அம்பணத் தன்ன யாமை யேறிச்
செம்பின் அன்ன பார்ப்புப் பலதுஞ்சும்
யாணர் ஊர நின்னினும்
பாணன் பொய்யன் பல்சூ ளினனே.43 தீம்பெரும் பொய்கை யாமை இளம்பார்ப்புத்
தாய்முகம் நோக்கி வளர்ந்திசின் ஆஅங்கு
அதுவே ஐயநின் மார்பே
அறிந்தனை ஒழுகுமதி அறனுமார் அதுவே.44 கூதிர் ஆயின் தன்கலிழ் தந்து
வேனில் ஆயின் மணிநிறங் கொள்ளும்
யாறுஅணிந் தன்றுநின் ஊரே
பச்ப்பணிந் தனவால் மகிழ்நஎன் கண்ணே.45 நினக்கே அன்றுஅது எமக்குமார் இனிதே
நின்மார்பு நய்ந்த நன்னுதல் அரிவை
வேண்டிய குறிப்பினை யாகி
ஈண்டுநீ அருளாது ஆண்டுறை தல்லே.46 முள்ளெயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு சொரிந்த
அகன்பெரு வட்டி நிறைய மனையோள்
அரிகால் பெரும்பயறு நிறைக்கும் ஊர
மாணிமழை ஆயம் அறியும்நின்
பாணன் போலப் பலபொய்த் தல்லே.47 வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள்
வராஅல் அஒரிந்த வட்டியுள் மனையோள்
யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கும் ஊர
வேண்டேம் பெருமநின் பரத்தை
யாண்டுச் செய்குறியோடு ஈண்டுநீ வரவே.48 அஞ்சில் ஓதி அசைநடைப் பாண்மகள்
சில்மீன் சொரிந்து பல்நெல் பெறூஉம்
யாணர் ஊரநின் பாண்மகன்
யார்நலம் சிதயப் பொய்க்குமோ இனியே.49 துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்
வஞ்சி ஓங்கிய யாணர் ஊர
தஞ்சம் அருளாய் நீயேநின்
நெஞ்சம் பெற்ற இவளுமார் அழுமே. 50

Advertisement
 
Advertisement