Advertisement

சைவ சித்தாந்தம் குறித்த விழிப்புணர்வு அவசியம்!

மதுரை: மதுரை திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில், தமிழ் புத்தாண்டு விழா, நக்கீரர் விழா, விவேகானந்தர் 150வது ஆண்டு விழா நேற்று நடந்தது. நிறுவனர் சந்திரசேகரன் தலைமை வகித்து பேசுகையில், சிவபெருமானின் 64 திருவிளையாடல்களை தொகுப்பது, சைவ சித்தாந்தம் தொடர்பாக இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை இம்மையம் தொடர்ந்து செயல்படுத்தும். மேலும், மீனாட்சி அம்மன் கோயில் சிறப்புக்களையும் மக்களிடையே எடுத்துச் செல்லப்படும், என்றார்.தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு மற்றும் பஞ்சாங்கம் வாசிப்பு குறித்து, தருமை ஆதீன புலவர் குருசாமி தேசிகர், நக்கீரர் குறித்து பேராசிரியை சந்திரா, விவேகானந்தர் குறித்து பேராசிரியர் சீனிவாசன் பேசினர். மைய பொருளாளர் பானுமதி முன்னிலை வகித்தார். பிரகாஷ் வரவேற்றார். சரவணன் நன்றி கூறினார்.

Advertisement
 
Advertisement