Advertisement

அறநிலையத்துறை கோவில்களில் வாரம் ஒரு முறை ஆன்மிக சொற்பொழிவு!

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் <உள்ள, அனைத்து கோவில்களிலும், வாரத்திற்கு ஒரு நாள், கோவில் நிர்வாகத்தின் சார்பில், சொற்பொழிவு நடத்த வேண்டும் என, அறிவுறுதப்பட்டுள்ளது, என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், ஆனந்தன் கூறினார்.சட்டசபையில், நேற்று நடந்த இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது,அமைச்சர் ஆனந்தன் அளித்த, பதில் உரை:
*கோவில்களில் பெறப்படும், வேட்டி, சேலை போன்றவை, கோவில் காரியங்களுக்கு பயன்படுத்தியது போக, மீதமிருப்பவை, காந்தி, அண்ணாதுரை ஆகியோரின் பிறந்தநாளில், ஏழை எளியோருக்கு வழங்கப்படும்.
*அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த ஆண்டில் மட்டும், 1912 கோவில்களில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டன.
*கோவில்களில் உள்ள மரத்தேர்களை செப்பனிடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு, குறிப்பிட்ட கால நிர்ணயம் இல்லை, எனினும், ஆண்டுக்கு குறிப்பிட்ட மரத்தேர்களை செப்பனிடும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே, செப்பனிட்டது போக, மீதமுள்ள, 52 மரத்தேர்களை செப்பனிடும் பணி நடக்கும்.
*அனைத்து கோவில்களிலும், வாரத்திற்கு ஒரு நாள் கோவில் நிர்வாகத்தின் சார்பில், சொற்பொழிவு நடத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
*ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ், 11, 931 கோவில்கள் பயன் பெற்றுள்ளன.
*தனியார் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்ட, 394 ஏக்கர் நிலங்கள், மீண்டும் அறநிலையத் துறையின் பெயருக்கு, பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Advertisement
 
Advertisement