Advertisement

சென்னை ஆடி திரு­வி­ழாவில் தீயோடு விளை­யாட்டு!

சென்னை: எருக்­கஞ்­சேரி திரு­வீ­தி­யம்மன் கோவிலில், நேற்று முன்­தினம் நடந்த, ஆடி திரு­வி­ழாவில், அந்த பகுதி இளை­ஞர்கள், தீப்­பந்­தங்­களை சுழற்றி வித்தை காட்­டினர். ஆடி மாதம் முடிந்­தாலும், சென்­னையில் உள்ள பெரும்­பா­லான கோவில்­களில், இன்னும், ஆடி திரு­விழா முடி­ய­வில்லை. ஐந்தாம் வாரத்தை கடந்து, பத்தாம் வாரம் வரை திரு­விழா நடந்து கொண்­டி­ருக்­கி­றது. வியா­சர்­பாடி, எருக்­கஞ்­சேரி நெடுஞ்­சா­லையில் உள்ள, திரு­வீ­தி­யம்மன் கோவிலின், 83ம் ஆண்டு ஆடி திரு­விழா, தற்­போது நடந்து வரு­கி­றது. ஒவ்­வொரு வாரமும் அம்­ம­னுக்கு அபி­ஷேக ஆரா­த­னை­யுடன், கிராம திரு­விழா போல், குழந்­தை­க­ளுக்­கான ராட்­டினம் உள்­ளிட்ட விளை­யாட்டு உப­க­ர­ணங்­களும், வாண­வே­டிக்­கை­களும் நடை­பெற்று வரு­கின்­றன. நேற்று முன்­தினம் இரவு, இசை கச்­சே­ரி­யுடன், பகுதி இளை­ஞர்­களின் தீப்­பந்­தாட்­டமும் நடை­பெற்­றது. தீப்­பந்­தங்­களை சகட்டு மேனிக்கு சுழற்‌றி ஆடினர். தீப்­பந்த விளை­யாட்டால், விபத்து நிக­ழாமல் இருக்க, போலீசார், பாது­காப்பு பணியில் ஈடு­பட்­டனர்.

Advertisement
 
Advertisement