Advertisement

சென்னையில் ஆறாவது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி!

சென்னை: திருவான்மியூரை அடுத்துள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவப்பல்கலைக்கழக மைதானத்தில், ஆறாவது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி ஜூலை 8 முதல் 14 வரை காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. இதில் வெவ்வேறு இயக்கங்கள், பல்வேறு சித்தர்கள், பலதரப்பட்ட சேவகர்கள், பலவகையான அணுகுமுறைகள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த அமைப்பில் பல்வேறு இந்து சமய ஆன்மிக அமைப்புகளின் சேவையை எடுத்து காட்டவும், சேவையின் மூலமாகவே இறைவனை அடைய முடியும் (ரிக்வேதம்) என்ற இந்து மதத்தின் மேன்மையான தத்துவத்தை விளக்குவதற்கும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டள்ளது. அத்துடன் வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாத்தல், ஜீவராசிகளை பேணுதல், சுற்றுச்சூழலை பராமரித்தல், பெண்மையை போற்றுதல், நாட்டுப்பற்றை வளர்ப்பது, பெற்றோர், ஆசிரியர் மற்றும் பெரி÷ யார்களை வணங்குதல் போன்ற அரும்பண்புகளை அடிப்படையாக கொண்டது. மேலும் ஹிந்து ஆன்மிகம் மற்றும் ஹிந்து வாழ்க்கை முறை என்கிற கருத்தை மையமாக கொண்டதே இந்த ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் நோக்கமாகும்.

இந்த கண்காட்சியில் இந்து மதத்தை சேர்ந்த 260 அமைப்புகள் ஸ்டால்கள் அமைத்து அதன் மூலம் அந்தந்த அமைப்புகள் செய்யும் சேவைகளை விவரிக்கின்றன. இந்த கண்காட்சியில் 9.7.14 புதன் காலை 10.45 முதல் 12.45 வரை 18 பசுக்களுடன் கோ பூஜை, கஜ பூஜை மற்றும் துளசி வந்தனம் நடைபெற்றது. மேலும் காலை 10 முதல் 12 மணிக்குள் இந்திய சுதேச அமைப்புகளின் கொள்கை கோட்பாடுகள், கோயில்கள் ஒரு ஆய்வு பற்றி
பேராசிரியர் வரதராஜன் விளக்குகிறார். இரவு 7 மணி முதல் 9 மணிவரை சுற்றுச்சூழல் கிருஷ்ணார்ப்பணம் நிகழ்ச்சி நடைபெறும்.

10.7.14 வியாழன் காலை 10.45 மணி முதல் 12.45 வரை கங்கா பூஜை, பூமி வந்தனம் நடைபெறும். அத்துடன் இந்திய ஆறுகள் புனரமைப்பு பற்றி ஸ்ரீனிவாஸ் அவர்கள் விளக்குகிறார். இரவு 7 மணி முதல் 9 மணிவரை லக்ஷிமி நாராயணன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும்.

11.7.14 வெள்ளி காலை 9.30 மணிமுதல் 10.30 மணி வரை முட்டுச்சந்தில் தவிக்கும் பெண்ணியத்திற்கு, இந்திய பெண்மையின் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். 10.45 மணி முதல் 12.45 மணி வரை 1008 கன்யா வந்தனம் நிகழ்ச்சியும், அடுத்ததாக இரவு 7 முதல் 9 மணிக்கு சண்டி ஹோமமும் குங்கும அர்ச்சனையும் நடைபெறும்.

12.7.14 சனிகிழமை காலை 10 மணிமுதல் 12 மணி வரை குடும்ப விழுமத்தில்-பெற்றோருக்கு மரியாதை, பெரியோருக்கு மரியாதை, பெண்ணுக்கு மரியாதை பற்றி முரளிதரன் மற்றும் கனகசபாபதி ஆகியோர் விளக்குகின்றனர். காலை 10.45 முதில் 12.45 வரை 1008 டீச்சர்களுடன் கூடிய ஆச்சாரிய வந்தனம் நடைபெறும். அடுத்ததாக இரவு 7 முதல் 9 மணிக்கு ஜெய ஜெய சங்கரா நிகழ்ச்சி நடைபெறும்.

13.7.14 ஞாயிறு காலை 10.45 மணிமுதல் 12.45 மணி வரை பாரத மாதா மற்றும் பரம் வீர் வந்தனம் நடைபெறும். மாலை 3 முதல் 5 மணி வரை ஜாதி அமைப்புகள், ஆன்மிக தோற்றம், சமுதாய உருவாக்கத்தில் பங்களிப்பு, பொருளாதார ரீதியாக மற்றும் கலாச்சார ரீதியாக சமூக மூலதனம், ஜாதி பற்றிய தவறான கோட்பாடுகள் பற்றி மதுரை மடீசியா ஞானசம்பந்தன், எழுத்தாளர் ஜோடி க்ரூஸ் ஆகியோர் விளக்குகின்றனர். அடுத்ததாக இரவு 7 முதல் 9 மணிக்கு ஜெய ஜெய சங்கரா நிகழ்ச்சி நடைபெறும்.

14.7.14 திங்கள் காலை 10.45 மணிமுதல் 12.45 மணி வரை விருக்ஷ மற்றும் நாக வந்தனம் நடைபெறும். அடுத்ததாக இரவு 7 முதல் 9 மணிக்கு
ஸ்ரீநிவாச கல்யாணம் நடைபெறும்.

மேலும் விபரங்களுக்கு: இந்து ஆன்மீக மற்றும் சேவை அறக்கட்டளை
போன்: 72990 69732,33/044 2466 2314/15, 94431 40930

Advertisement
 
Advertisement