Advertisement

ரமலான் சிந்தனைகள்: இறைவன் தந்த செல்வம்!

ஒருமுறை, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் முன்னால் வந்த ஒருவரின் உடைகள் தரமற்றதாகவும், சாதாரணமாகவும் இருந்தன. அண்ணலார் அவரிடம், ‘உங்களிடம் நிறைய பணம் இருக்கிறதல்லவா?” என்றார்.அவர், ’ஆம்’ என பதிலளிக்க, ‘என்னென்ன வகையான சொத்து உங்களிடம் இருக்கிறது,” என்றார். வந்தவர், ‘அண்ணலே! என்னிடம் ஒட்டகங்கள், குதிரைகள், ஆடுகள், அடிமைகள் என ஏராளமான சொத்துக்கள் உள்ளன,” எனக் குறிப்பிட்டார். நாயகம் அவரிடம், ‘இறைவன் உங்களுக்கு இவ்வளவு சொத்துக்கள் கொடுத்திருக்கிறான் என்றால், அவனது அருளின் அடையாளம் உங்கள் உடலில் வெளிப் பட்டிருக்க வேண்டும்,” என்றார்கள். அதாவது, ஆண்டவன் செல்வத்தை வாரி வழங்கியிருந்தும், அதைப் பயன்படுத்தாமல் பூட்டி வைப்பதில் லாபம் ஏதுமில்லை என்பது இதன் கருத்தாக அமைந்தது. அதே நேரம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ‘நீங்கள் விரும்புவதை சாப்பிடலாம். விரும்பும் ஆடையை அணியலாம். ஆனால், கர்வமும், வீண் விரயமும் இருக்கக்கூடாது,” என்று நிபந்தனையும் விதிக்கிறார்கள். இறைவன் கொடுத்ததைக் கொண்டு, சிறந்த முறையில் ரமலானைக் கொண்டாட தயாராவோம்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.26

Advertisement
 
Advertisement