Advertisement

சிறுங்குன்றம் கோவிலுக்கு விமோசனம் கிடைக்குமா?

திருப்போரூர்: சிறுங்குன்றம் வினைதீர்க்கும் விநாயகர் கோவில் பராமரிப்பின்றி சீரழிந்து வருகிறது. திருப்போரூர் அடுத்த, சிறுங்குன்றத்தில், இந்து அறநிலையத் துறை சார்ந்த கோவிலாக வினைதீர்க்கும் விநாயகர் கோவில், பிரதான அனுமந்தபுரம் சாலையில் உள்ளது. விமானத்தில் தட்சிணாமூர்த்தியின் உருவமும், மண்டபத்தின் நான்கு பக்கத்திலும், நந்திப் பெருமானும் வீற்றிருக்க, ஒரு சிவாலயத்திற்கான தோற்றத்துடன் கோவில் அமைந்து உள்ளது. எனினும், பல ஆண்டுகளாக விநாயகர் கோவிலாக அறியப்பட்டு வருகிறது. கோவிலின் பெரும்பகுதி, செங்கற்களால் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலின் வரலாறு குறித்து ஆய்வு மேற்கொண்டு, விலைமதிப்பற்ற, இந்த பொக்கிஷத்தை பாதுகாக்கவும், பொலிவின்றி இடிந்து விழும் நிலையில் உள்ள இக்கோவிலை காப்பாற்றவும், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, பக்தர்கள் கூறுகையில், துறை அதிகாரியிடம் கோவிலின் நிலையை எடுத்து கூறியுள்ளோம். மனு கொடுத்தும் பலன் இல்லை, வரும் விநாயகர் சதுர்த்திக்குள் விடிவு ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.

Advertisement
 
Advertisement