Advertisement

கருப்பசாமி கோயில் ஆடித்திருவிழா!

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வடக்கு தெரு யானைக்கல் வீதி பிள்ளை காளியம்மன், கருப்பசாமி கோயில் ஆடித்திருவிழா ஜூலை 27ல், காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. இதை முன்னிட்டு, அம்பாள், வராஹி, சந்தான சரஸ்வதி, அன்னபூரணி, காயத்ரி, சோட்டாணிக்கரை பகவதி அலங்காரங்களில் அம்மன் அருள்பாலித்தார். குபேர லட்சுமி, கன்னிகா, மாங்கல்ய, பரிகார, திருவிளக்கு பூஜை நடந்தது. ஆக.5ல், நொச்சியூரணியில் அம்மன் கரகம் எடுத்து அக்னி சட்டிகளுடன் ஊர்வலமாக கோயில் வந்தது. நேற்று, கருப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

Advertisement
 
Advertisement