Advertisement

திருமலை வாடகை அறைகளுக்கு 7,200 புதிய போர்வைகள்!

திருப்பதி:திருமலையில் உள்ள, தேவஸ்தான வாடகை அறைகளுக்கு, 7,200 புதிய போர்வைகளை, தேவஸ்தானம் வழங்கியுள்ளது.திருமலையில், இந்த வாரம், வருடாந்திர பிரம்மோற்சவம் துவங்க உள்ளது. ஆண்டுதோறும், பிரம்மோற்சவம் துவங்குவதற்கு முன், திருமலையில் உள்ள வாடகை அறைகளில் உள்ள, கட்டில், போர்வை, தலையணை, படுக்கை விரிப்பு, மெத்தை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் புதிதாக மாற்றப்படும். ஆனால், இந்த ஆண்டு, இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தேவஸ்தானம் தவறி விட்டது. அதிக வாடகை கட்டணம் உடைய ஓய்வு அறைகளுக்கு மட்டும், 7,200 புதிய போர்வைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை, சன்னிதானம் ஓய்வு அறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. திருமலையில் உள்ள சன்னிதானம், பாஞ்சன்னியம், கவுஸ்துபம், நந்தகம், அஷ்டவிநாயக் ஓய்வு அறைகளுக்கு, இந்த போர்வைகளை பயன்படுத்தும்படி, சுகாதாரத் துறையிடம் தேவஸ்தானம் கூறியுள்ளது. திருமலையில், இலவச அறைகள் மற்றும் 50, 100, 150 ரூபாய் கட்டணம் கொண்ட வாடகை அறைகளில், போர்வை மற்றும் படுக்கை விரிப்புகளின் நிலை படுமோசமாக உள்ளதாக, பத்திரிகைகளில் செய்தி வெளியானது.எனினும், அந்த அறைகளுக்கு இன்னும் புதிய போர்வைகள் வழங்கப்படவில்லை.

Advertisement
 
Advertisement