Advertisement

உலகு நலம் பெற!

சர்வேஷாம் ஸ்வஸ்திர் பவது

இதுவும் சாந்தி மந்திரத்தில் ஒன்று. பிரபஞ்சத்தில் எங்கும் எல்லாவற்றிலும் நன்மை உண்டாகட்டும் என்பது இதன் பொருள். நன்மை என்பது என்ன? சிங்கத்துக்கு உணவு கிடைக்கட்டும் என்றால், மானுக்கு உயிராபத்து அல்லவா? அல்லது மான் காக்கப்படட்டும் என்றால் சிங்கத்துக்கு உணவிருக்காதே. அப்போது இது நன்மையாகாதே. அதல்ல பொருள்.

மானுக்குத் தேவையான உணவும், சிங்கத்துக்குத் தேவையான உணவு கிடைத்தால்தான் உலகின் சமநிலை சரியாயிருக்கும். இது உதாரணம்தான். இதுபோல், அளவான வெயில், அளவான மழை, அளவான பனி... இப்படி அனைத்தும் சமச்சீராக இருத்தல்தான் நன்மை. இதில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டால், உலகின் சமநிலை சீர்கெடும். அப்படி இல்லாமல், எல்லாவற்றிலும், எல்லாவற்றுக்கும் தேவையான அளவுக்குக் கிடைத்தல்தான் நன்மை. அதைத்தான் பிரார்த்திக்கிறது இந்த மந்திரம்.

Advertisement
 
Advertisement