Advertisement

திருமணம் கைகூட!

நமோ விவஸ்தே பிரும்மன்
பாஸ்வதே விஷ்ணு தேஜஸே
ஜகத் ப்ரஸவித்ரே ஸுர்யாய
ஸவித்ரே கர்ம தாயினே
ஸுர்யாய நம: இதம் அர்க்யம்:

மணமாக வேண்டிய பெண்ணின் வயது எத்தனையோ, அத்தனை எலுமிச்சை நெய் விளக்குகளை கஜலட்சுமி அல்லது துர்க்கையின் எதிரே ஏற்றி வைத்து வழிபட வேண்டும். கஜலட்சுமி, துர்க்கைக்கு சுத்தமான மஞ்சள் தூளினால் அர்ச்சனை செய்ய வேண்டும். பால் பாயசம் நிவேதனம் செய்து வழிபாடு முடிந்ததும் குழந்தைகளுக்கு பிரசாதமாக அதைத் தர வேண்டும். அர்ச்சனை செய்த மஞ்சளைப் பூசி தினமும் நீராட வேண்டும். காலையில் நீராடி முடிந்ததும் சூரியனைப் பார்த்தபடி கிழக்கு நோக்கி நின்று. இரு கைகளாலும் நீரை எடுத்துக்கொண்டு இந்த சுலோகத்தைக் கூறி மும்முறை நீரை கீழே விட வேண்டும். இதனால் திருமணம் விரைவில் கைகூடும்.

Advertisement
 
Advertisement