Advertisement

கல்யாண சித்தி பெற!

ஓம் ஐம் ஹ்ரீம் யோகினி!
சித்தி சுந்தரி, கவுரி, அம்பிகே!
யோக பயங்கரீ!
சகல ஸ்தாவர ஜங்கம முக ஹ்ருதயம்
மம வசம் ஆகர்ஷய சுவாஹா!

வெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் கோயிலில் துர்க்கை அம்மன் முன், மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி, கோலமிட்டு அதில் விளக்கு ஏற்ற வேண்டும். அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றி தீபம் ஏற்றவும். ஒரு ஊதுபத்தியை எண்ணெயில் நனைத்து தீக்குச்சியால் ஏற்ற வேண்டும். அந்தச் சுடரைக் கொண்டு தீபத்தை ஏற்ற வேண்டும். விளக்கின் முன்பு அருகம்புல், துளசி சேர்ந்த தீர்த்தம் வைக்க வேண்டும். திருவிளக்குக்கு முன்பு ஒரு எலுமிச்சம்பழம் படைக்கவும் இரண்டு எலுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாக வெட்டி சாறு எடுத்து அதில் தேனும் சர்க்கரையும் கலந்து படைக்கவும். எலுமிச்சம் பழத் தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி அகல் விளக்குகளைப் போலச் செய்து அதில் நெய் சேர்த்து தீபமாக ஏற்றவும். அதையடுத்து இந்த மந்திரத்தைச் சொல்லி வழிபட வேண்டும். பூஜையில் வைத்த எலுமிச்சைப் பழத்தை வீட்டுக்குக் கொண்டு வந்து. பிழிந்து சாப்பிட வேண்டும். இந்த வழிபாட்டை தொடர்ந்து 12 வாரம் செய்து வந்தால், காரணம் தெரியாமல் தடைப்பட்டு வருகின்ற திருமணம் விரைவில் கைகூடும். மனத்துக்குப் பிடிக்கும் வண்ணம் மணவாழ்வு அமையும். கோயிலில் செய்ய இயலாதவர்கள் வீட்டிலேயே இதைச் செய்யலாம். மந்திரத்தை குறைந்தது 24 முறை 48 முறை என்ற அமைத்துக் கொள்ளலாம். திருமணம் கைக்கூடியதும். துர்க்கைக்கு அபிஷேகம், வஸ்திரம், மாலை, அர்ச்சனை என பிரார்த்னையை நிறைவேற்ற வேண்டும்.

Advertisement
 
Advertisement