Advertisement

சந்தோஷம் தழைக்க!

ப்ரஸீதா துல ஜன்மாஸி
சதா த்வம் கேசவ ப்ரியே
ப்ரஸீத வரதே தேவி
விஷ்ணோ: ப்ரியகரீ ஸதா

கேசவன் என்றும் விஷ்ணு என்றும் போற்றப்படும் திருமாலுக்குப் பிரியமானவள் துளசி! தன்னைத் துதிக்கும் அடியார்களுக்கு பேரன்புடன் அவர்கள் விரும்பும் வரங்களைத் தந்தருள்பவள் துளசி. தினமும் காலையில் வீட்டில் துளசிக்கு அருகே விளக்கு ஏற்றி. ஊதுபத்தி கமழச் செய்து, குங்குமம் இட்டு, வணங்க வேண்டும். முடிந்தால், பூ சார்த்துவதும் நல்லது. மாலையிலும் துளசி அருகே விளக்கேற்ற வேண்டும். பிறகு, அருகே சொல்லப்பட்டுள்ள தோத்திரத்தை 12 முறை சொல்லி, 12 முறை நமஸ்கரிக்க வேண்டும். இதனால் குடும்பத்தில் சந்தோஷம் தழைக்கும். (குறிப்பு: ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், அஷ்டமி, துவாதசி, சதுர்த்தி, பவுர்ணமி, அமாவாசை திதிகள் மற்றும் திருவோண நட்சத்திர தினங்களில் துளசி இலைகளைப் பறிக்கக் கூடாது.

Advertisement
 
Advertisement