Advertisement

மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில் திருவிழா!

பாலக்காடு: பாலக்காடு, மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில் திருவிழா, நேற்று விமர்சியாக கொண்டாடப்பட்டது. கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள, புகழ்பெற்ற மணப்புள்ள பகவதி அம்மன் கோவில். மாசி மாத திருவிழா, நேற்று காலை, 5:30 மணிக்கு மகாகணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை 4 மணிக்கு, திருவிழாவின் சிறப்பு அம்சமான, மணப்புள்ளி பகவதி அம்மனின் உருவ சிலை ஏந்தி, யானைகளின் அணிவகுப்பு, கோட்டை வாசலில் நடந்தது. திருவிழாவையொட்டி, வடக்கன்தறை, யாக்கிரை, கொப்பம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த, 15 யானைகளின் அணிவகுப்பு, கோட்டை மைதானத்திலும் நடந்தது. இரவில் நடந்த, வாணவேடிக்கை, அனைவரையும் கவர்ந்தது.

Advertisement
 
Advertisement