Advertisement

அய்யாவாடி மகா பிரத்தியங்கிரா கோயிலில் நிகும்பலா யாகம்!

மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடியில் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயில் உள்ளது. இங்கு ராவணன் மகன் மேகநாதனும், பஞ்ச பாண்டவர்களும் பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றுள்ளனர். அம்மாவாசை தோறும் இங்கு மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பு வாய்ந்தது. இந்த யாகத்தில் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்தால் சத்ரு உபாதைகள் நீங்கி சகல நன்மைகளும் கிடைக்கும். சித்திரை மாத அம்மாவாசையை முன்னிட்டு, காலை அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்பாளை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. மதியம் 1மணிக்கு தண்டபாணி குருக்கள் யாகத்தில் மிளகாய் வற்றல்கொட்டி நிகு ம்பலா யாகத்தை நடத்திவைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் செ ய்தனர்.அய்யாவாடிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நாச்சியார்கோயில் போலீஸ் மற்றும் ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement
 
Advertisement