Advertisement

சிவ பூசையும் சிவ தரிசனமும் நித்தமும் செய்தல் வேண்டும்.

முப்பொழுதும் அனுதினம் சிவபூசை செயவேண்டும்
முனிவர்சுரர் மறைய வர்க்கும்
மொழியினி: தன்றியிரு பொழுதினொரு பொழுதேனும்
முயன்றதைப் புரிக நாளும்
தப்பொழிய வுயர்காலை யுச்சிமா லையொடரைச்
சாமத் தெனுந்தெ ரிசனம்
தருசுவா யம்புவ விலிங்கந் தனைப்புரிக
தக்கமா லையிலே னும்நீள்
கைப்பதும மலர்குவித் தேத்துதலும் இன்றியே
காரிரவில் நுகர விழெலாம்
காலனூ ரிற்கிருமி மலைபோற் குவிந்திடக்
கண்டிவரை யுண்க வென்றே
செப்பியுண வைத்துநர கத்திடுவர் என்றுமறை
தேவிக்கு நீமொ ழிந்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

Advertisement
 
Advertisement