Advertisement

பெருமாள் கோவில் உழவார பணிகள் களம் இறங்கிய தன்னார்வலர்கள்!

காஞ்சிபுரம்: ஸ்ரீஜெகத்குரு சேவாஸ் மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சி இணைந்து, காஞ்சி புரம், யதோக்தகாரி பெருமாள் கோவிலில், நேற்று, உழவார பணிகள் மேற்கொண்டன. காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலின் பல்வேறு பகுதிகளில் தேவையற்ற செடிகளும், கற்களும் அதிகம் காணப்பட்டன. சென்னை ஸ்ரீஜெகத்குரு சேவாஸ் மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சி இணைந்து, கோவிலில் உழவார பணிகளை மேற்கொள்ள முடிவு செய்தன. அதன்படி, நேற்று காலை, 9:30 மணிக்கு, கோவிலின் அனைத்து பகுதிகளிலும் உழவார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஸ்ரீஜெகத்குரு சேவாஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களும், ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்கள், மற்றும் பெண்கள் என, 80க்கும் மேற்பட்டோர் உழவார பணிகளில் ஈடுபட்டனர். கோவிலின் உட்புறம், சுவர்களில் முளைத்திருந்த தேவையற்ற செடிகள் அகற்றப்பட்டன. உட்பிரகார பாதைகளில் இருந்த கற்கள், முட்கள் போன்றவை அகற்றி சுத்தம் செய்யப்பட்டன. உழவார பணிகள் ஒருபுறம் நடைபெற, ராஜன் கண் மருத்துவமனை மற்றும் மகாலஷ்மி மருத்துவமனை சார்பில், மருத்துவர்களை கொண்டு, இலவச கண் பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மருத்துவ முகாமில், 250க்கும் மேற்பட்டோர், பரிசோதனை மற்றும் ஆலோசனை பெற்றனர்.

Advertisement
 
Advertisement