Advertisement

திருமலையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு பக்தி காட்சிகள்!

திருப்பதி: திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க வைகுந்தம் காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள அறைகளில் காத்திருக்கும் பக்தர்களுக்கு பக்தி காட்சிகள் ஔிபரப்பப்படுகிறது. இங்குள்ள திரையில் திருமலையின் சிறப்புகள் பழம் பெருமைகள் வீடியோ காட்சியாக ஔிபரப்பப்படும் மேலும் பக்தர்களுக்கு தேவையான விஷயங்களும் திருவிழா காட்சிகளும் திருமலையை சுற்றியுள்ள புண்ணிய தலங்களும் ஔிபரப்பாகும். இது நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு உற்சாகத்தையும் தேவையான தகவல்களையும் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
 
Advertisement