Advertisement

பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா!

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, இண்டூரில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி கோட்டை கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த, 4ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு கங்கனம் கட்டுதல், கொடியேற்றுதல், 5 மணிக்கு கங்கை பூஜையும், 6 மணிக்கு கோ பூஜை, யாகசாலை பிரவேசம், இரவு, 7 மணி முதல் காலயாக பூஜையும், கணபதி நவக்கிரக ஹோமமும் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 5 மணிக்கு சுப்ரபாதமும், 6 மணிக்கு வேதபாராயணமும், 7 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜையும், 10.30 மணிக்கு மஹா பூர்ணாஹூதியும், மங்கள ஆரத்தியும், 11 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜை, மாலை, 4 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், 7.30 மணிக்கு, ஐந்தாம் காலயாக பூஜையும், இரவு, 10 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. நேற்று அதிகாலை, 5 மணிக்கு சுப்ரபாதமும், 6 மணிக்கு வேதபாராயணமும், 7 மணிக்கு, ஆறாவது காலயாக பூஜையும், 9 மணிக்கு மேல், 10.30 மணிக்குள் கும்பாபிஷேகமும் நடந்தது. மதியம், 12 மணிக்கு மஹா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. கும்பாபிஷேக விழாவில், பெருமாள் பற்றிய சிறப்பு உபன்யாசம் மற்றும் சொற்பொழிவு நடந்தது.

Advertisement
 
Advertisement