Advertisement

மந்திக் கருப்பர் துதி

ஆரணச் சாலையும் சித்திரச் சவுக்கையும்
அன்ன சத்திர வீதியழகும்
அஸ்த மண்டபமுடன் கர்ப்பக்கிரகமும்
ஆதிசோபன மண்டபமுடன்
பூரணப் பெருமையும் கம்பமணி மண்டபம்
பூஜை மாளிகையுடன்
பொன்னழகு திருமதில் ஆலயவாசலும்
புதுராஜ கோபுரவடிவும்
வாரணப்பந்தியும் நந்திகளும் மேடையும்
மயிலாடும் வீதியழகும்
வளரும் முத்தையனுடன் மகிமையும்
கிருபையும்
காதணி அழகிய மீனிணைப்பாக
அகஸ்தீஸ்வரஸ்வாமி வாழ்த்துதற்கு
இனியதாகுமே சிருங்கபுரம் எனும்
கோட்டூர்ப் புரியின்
கருணை நயினார் வாசல் வளர்கின்ற பிரதானி
முத்துக்கருப்பண்ண சுவாமி துரையே.

தீவட்டி உடனிருக்க பகல்வத்தி நிறையிட்ட
சிங்காரம் ஒருபாரிசம்
தீபதூபப் புகையுடன் சாம்பிராணி
வாசங்கள் தெய்வங்கள் ஒருபாரிசம்
வாய்விட்டதட்டியே திருட்டுப்பிசாசகளை
வகைகேட்பதொரு பாரிசம்
வகை கேட்டிருக்கியே சவுக்கடியினால்
அடித்து அதட்டுவது ஒரு பாரிசம்
நீ விட்டுவிடு சுவாமி நான் போறேன்
போறேன் என நின்றாடுவது ஒரு பாரிசம்
நெற்றிமயிர் சுற்றியே நிலையாணி
யிட்டுதிரு நீறணிவது ஒரு பாரிசம்
வரும்போது முத்துக்கருப்பே
கருப்பையா வாவென்று
வரவழைக்கவே தான் பெயரிட்ட
புதுமையே பெரிய குலதெய்வமே
பெரிய மந்திக்கருப்பண்ண சுவாமி துரையே.

காசிக்கும் அப்பாலே அறுபதாம் காத
வடிகாணாது கண்டமயிலே
கர்நாடுதேசமும் தெஞ்சி மேல் மட்டுக்கும்
கத்தியே வெட்டி வருவாய்
தேசக்குதிரை கொண்டு ஒட்டையானை
கொண்டுதெஞ்சிமேல் வந்திறங்கி
பேரானகோட்டூர் நகர்தனில் வளர்கின்ற
பிரதானி முத்துக்கருப்பண்ண சுவாமிதுரையே

காரிட்ட கொண்டையும் மேலழகு
வதனமும்காதில் கடுக்கனழகும்
நேரிட்ட பார்வையும் நெற்றியில்
திலகமும் ஏகாந்தவல்ல வெட்டும்
சீரிட்ட சித்தாடைவாங்கும் சமுதாடும்
சேர்ந்திருக்கக் கருங்கச்சை வல்லவெட்டும்
பேரிட்டபுதுமையே பெரியகுல தெய்வமே
பெரியமந்திக்கருப்பண்ண சுவாமிதுரையே

எண்திசை புகழ்கின்ற தென்னாலைநாடுதனில்
ஏகமாகிய மூர்த்தியாம்
லண்டப் பிசாசுகள் தொண்டரிடம்
அணுகாமல் வரமுதவும் மேகவர்ணம்
அண்டரசங் கோட்டூரில் அழகிய
நயினாரோடே
மண்டபம் நான்குகால் சவுக்கையில்
வளர்கின்ற பிரதானி முத்துக்கருப்பண்ண சாமி துரையே 5.

Advertisement
 
Advertisement