Advertisement

வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்!

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்ஸவ விழாவை முன்னிட்டு நடந்த திருக்கல்யாண உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இப்பகுதியில் பிரசித்தி பெற்ற பிரம்மோற்ஸவ விழா கடந்த 5 நாட்களாக கோயிலில் விமரிசையாக நடந்து வருகிறது. ஏழு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் 5ம் நாளான இன்று சேதுநாராயணப் பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. அதிகாலையில் சுவாமிக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை வழிபாட்டுடன் கூடிய திருமஞ்சனம் நடந்தது. அதனை தொடர்ந்து பெருமாள் மணக்கோலத்தில் கோயில் மண்டபத்தில் எழுந்தருளினார். அவரை தொடர்ந்து தாயார்கள் எழுந்தருளினர். சென்னை டி.வி.எஸ். நிறுவன அதிபர்கள் சரத்விஜயராகவன், பத்ரிவிஜயராகவன் முன்னிலையில் பூரண கும்பம் வைத்து மாங்கல்யபூஜைகளும், மணமாலை மாற்றும் வைபவமும் நடந்தது. பின்னர் வேதமந்திரங்கள் முழங்க சேதுநாராயணப்பெருமாள் தாயார்கள் இருவருக்கும் மாங்கல்யம் அணிவித்தார். பக்தர்கள் அட்சதை துõவியும், பூக்களை துõவியும் வழிபட்டனர். நலுங்கு வைபவமும், பக்தர்களுக்கு மாங்கல்ய கயிறு வழங்கலும், அன்னதானமும் நடந்தது. கோயில் சேவாசமிதி டிரஸ்ட் செயலாளர் நாராயணன், தலைவர் ராஜகோபாலன் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.

Advertisement
 
Advertisement