Advertisement

ஆடிப்பெருக்கு: புனித நீராடி பக்தர்கள் கோலாகல கொண்டாட்டம்!

மதுரை: ஆடிப்பெருக்கு பண்டிகையை, தங்கள் வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களிலும், சிலர் கடற்கரையிலும் கொண்டாடினர். ஆண்டு தோறும், ஆடி 18ம் தேதி, நீர்நிலைகளில் மங்கலப் பொருட்களை விட்டு, குடும்பத்துடன் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். இவ்வாண்டு, ஆடிப் பெருக்கை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில், பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்து கோலாகலமாக கொண்டாடினர். ஆடிப்பெருக்கை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தாலி பெருக்கி கட்டி புதுமணத் தம்பதிகள் சிறப்பு வழிபாடு செய்தனர். அனைத்து கோயில்களிலும் ஆடிப்பெருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

Advertisement
 
Advertisement