Advertisement

குலதெய்வம் கருப்பையா

கோட்டை வாழும் கருப்பய்யா
குலதெய்வம் நீ கருப்பய்யா!
கோட்டை வாழும் கருப்பய்யா
குலதெய்வம் நீ கருப்பய்யா

காக்கும் தெய்வம் கருப்பரய்யா
கவலையை யெல்லாம் தீருமய்யா!
நோக்கும் திசைதனில் நிற்பாயே
நொடியில் துன்பம் களைவாயே!

கோட்டை வாழும் குமரய்யா
கொள்ளை இன்பம் கொடுப்பாயே!
வேட்டை செல்லும் முன்னே நீ
விரைந்தே எம்மைக் காப்பாயே!

குதிரை உன்றன் வாகனம்தான்
கூரிய வாளுன் ஆயுதம்தான்!
அடிபிரம் பைநீ கொண்டாயே
ஆலயம் தன்னில் நின்றாயே!

உன்னைக் காணப் பெருங்கூட்டம்
உன்புகழ் பாட வருங்கூட்டம்
அவரவர் மனதினில் நிறைவாயே
அழகிய வாழ்வைத் தருவாயே!

பக்தர்கள் நாங்கள் பாதந்தோம்
பரவச முடனே எற்றிடுவாய்!
பாரினில் நன்மைகள் நடந்திடவே
தேரினில் தினம் நீ வலம்வருவாய்!

திருப்புத் தூரின் காவலனே
திசைகள் எட்டும் காப்பவனே
விருப்புடன் உன்றன் பதம்பணிந்தோம்
பொறுப்புடன் நன்மைகள் சேர்ப்பாயே!

Advertisement
 
Advertisement