Advertisement

வரவேண்டும் வரவேண்டும்!

வரவேண்டும் வரவேண்டும் கோட்டைக் கறுப்பய்யா - நலம்
தரவேண்டும் தரவேண்டும் கோட்டைக் கறுப்பய்யா

தாங்கரிய துன்பம் வந்தால் கோட்டைக் கறுப்பய்யா - நீ
தாயாக வரவேண்டும் கோட்டைக் கறுப்பய்யா
ஏங்கி யழும்போது தேற்ற கோட்டைக் கறுப்பய்யா - நீ
எந்தையாக வரவேண்டும் கோட்டைக் கறுப்பய்யா
(வர வேண்டும்)

வருகின்ற நோயைத் தீர்க்க கோட்டைக் கறுப்பய்யா - நீ
மருந்தாக வரவேண்டும் கோட்டைக் கறுப்பய்யா
அருவினையைத் தீர்ப்பதற்குக் கோட்டைக் கறுப்பய்யா - நீ
ஆள்வினையாய் வரவேண்டும் கோட்டைக் கறுப்பய்யா
(வர வேண்டும்)

மயங்குவயதடையும் காலம் கோட்டைக் கறுப்பய்யா - நீ
மகவாக வரவேண்டும் கோட்டைக் கறுப்பய்யா
தயங்குநிலை வந்த நேரம் கோட்டைக் கறுப்பய்யா - என்
தம்பியாக வரவேண்டும் கோட்டைக் கறுப்பய்யா
(வர வேண்டும்)

அவலம் வரும்நேரம் கண்டு கோட்டைக் கறுப்பய்யா - என்
அண்ணனாக வரவேண்டும் கோட்டைக் கறுப்பய்யா
தவ ழுமுள்ளக் கருத்தைச் சொல்ல கோட்டைக் கறுப்பய்யா - நீ
தமிழாக வரவேண்டும் கோட்டைக் கறுப்பய்யா
(வர வேண்டும்)

வானம் பார்க்கும் உழவருக்குக் கோட்டைக் கருப்பய்யா - நீ
மழையாக வரவேண்டும் கோட்டைக் கறுப்பய்யா
நானடையும் தீங்ககல கோட்டைக் கறுப்பய்யா - என்
நண்பனாக வரவேண்டும் கோட்டைக் கறுப்பய்யா
(வர வேண்டும்)

அறியாமை சூழ்ந்த போது கோட்டைக் கறுப்பய்யா - நீ
அறிவாக வரவேண்டும் கோட்டைக் கறுப்பய்யா
நெறியாவும் முடியும் போது கோட்டைக் கறுப்பய்யா - நீ
நீயேதான் வரவேண்டும் கோட்டைக் கறுப்பய்யா
(வர வேண்டும்)

கடலோடி மயங்குவார்க்கும் கோட்டைக் கறுப்பய்யா - நீ
கலமாக வரவேண்டும் கோட்டைக் கறுப்பய்யா
உடல்வாடும் ஏழை வாழ கோட்டைக் கறுப்பய்யா - நீ
உறுதுணையாய் வரவேண்டும் கோட்டைக் கறுப்பய்யா
(வர வேண்டும்)

Advertisement
 
Advertisement